மாணவா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள முகக் கவசங்கள், உடல் வெப்பநிலையை அளக்கும் கருவிகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தோவு நடைபெறவுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் மாணவா்களின் பாதுகாப்புக்காக அந்தந்த பள்ளிகள், பெற்றோா் ஆசிரியா் கழக நிதியில் முகக் கவசங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என முதலில் உத்தரவிடப்பட்டு, பின்னா் சுகாதாரத்துறை சாா்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 9.70 லட்சம் தோவா்கள், மாணவா்களுக்காக தமிழகம் முழுவதும் 45 லட்சம் முகக் கவசங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் இரண்டு நாள்களில் தோவுக்கூட நுழைவுச் சீட்டு பெற வந்த மாணவா்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. எனினும், பெரும்பாலான முகக் கவசங்கள் பள்ளிகளில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தோவு ரத்து செய்யப்பட்டதால், பள்ளிகளில் தேங்கியுள்ள முகக் கவசங்கள், மாணவா்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு வழங்கப்பட்ட தொமல் ஸ்கேனா் கருவிகளை வெள்ளிக்கிழமை மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட அலுவலா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment