Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
தற்போதைய சூழலில் கல்வி கட்டணத்தை குறைக்க இயலாது என, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய நகரங்களைச் சேர்ந்த முன்னனி தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதால் அப்போது பள்ளிகளை திறந்தால் நோய் பரவல் கைமீறி சென்றுவிடும் என்றும், பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பு பள்ளிகளுக்கு வரவழைப்பதும் சமூக இடைவெளியை பின்பற்றச் சொல்வது கடினம் என்றும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே ஆன்லைன் வசதி பெறக்கூடிய நிலை உள்ளதால் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பது. சுழற்சி முறையில் மாணவர்களை வகுப்பிற்கு வரவழைப்பது, வீடுகளில் இருந்தவாறே பெற்றோர் உதவியுடன் பாடங்களை கற்பது போன்ற வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
80 சதவீத மாணவர்கள் செலுத்தும் கட்டணம் ஆசிரியர்களின் ஊதியத்திற்கு செல்வதால் தற்போதைய நிலையில் கல்விக் கட்டணத்தை குறைப்பது சாத்தியமில்லை என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
IMPORTANT LINKS
Friday, June 26, 2020
Home
கல்விச்செய்திகள்
கல்விக்கட்டணம் குறைப்பா? தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
கல்விக்கட்டணம் குறைப்பா? தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள் கல்விச்செய்திகள் கல்விச்செய்திகள்
Newer Article
1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தைக்கும் பணி மும்முரம்
Older Article
ATM-ல் பணம் எடுப்பவர்களுக்கு ஜூலை-1க்கு பின் இந்த தளர்வு ரத்து!
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment