Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 5, 2020

பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்


பள்ளி, கல்லூரி பாடத்திட்டத் தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக் கப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தி:

சமுதாயம் எவ்வளவுக்கு எவ்வளவு கல்வியறிவுடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு இயற்கையைப் பாதுகாப் பதில் ஆர்வம் உள்ளதாக மாறுகிறது. இந்திய நாடு வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தா லும், சிறப்பான கல்வியாலும் இயற்கையுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலையும் கல்வியை யும் இணைப்பதே எனது முக்கிய குறிக்கோள். தற்போதைய வரைவு தேசிய கல்விக் கொள்கையின்படி திட்டமிடப் பட்டுள்ள ஒருங்கிணைந்த பாடத்திட்டம், கல்வித் திட்டங் கள் ஆகியவை, மாணவர்கள் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு குறித்த அறிவை வளர்த்துக் கொள் ளும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளன.

உயர் கல்வி பாடத் திட்டங்களும், சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளன. மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை சுற்றுச்சூழல் குறித்த பாடத்திட்டத்தை ஆரம் பப் பள்ளி முதல் உயர்நிலைக் கல்வி வரை சேர்த்து இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்வேறு பாடத்திட்டங்கள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. சுற்றுச் சூழலுக்கு எதிரான அச்சுறுத் தல்களை நாம் சரியான விதத் தில், கூட்டாக எதிர்கொள்ளா விட்டால், இந்த பின்னடைவு மேலும் தீவிரம் அடையக் கூடும். ஆகவே சுற்றுச்சூழல் கல்வியை பலப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment