12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இணையத்தள பயிற்சி வகுப்பை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சண்முகம், துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
'Amphisoft Technologies' நிறுவன இணையத்தளம் மூலம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாள்தோறும் 4 மணிநேர பயிற்சி, 4 மணிநேர பயிற்சித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. மாணவர்களுக்கு 80 பயிற்சித் தேர்வு, 12 திருப்புதல் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment