முருங்கையில் இருக்கும் வைட்டமின் சி சத்து, ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்துக்களை விட 7 மடங்கு அதிகமாகும். வைட்டமின் ஏ சத்து, கேரட்டில் இருக்கும் சத்தை விட 4 மடங்கு அதிகமாகும்.
வைட்டமின் பி 2 சத்து, வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி 2 சத்தை விட 50 மடங்கு அதிகமாகும். வைட்டமின் பி 3 சத்து, வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்களை விட 50 விழுக்காடு அதிகம் ஆகும். கால்சியம் சத்து பாலில் இருக்கும் சத்தை விட 4 மடங்கு அதிகம் ஆகும்.
இதனைப்போன்று பாலில் உள்ள புரோட்டின் சத்தை விட 2 மடங்கு அதிகமாகவும், முட்டையில் உள்ள மெக்னீசியம் சத்தை விட 36 மடங்கு அதிகமாகவும், பிற கீரைகளில் உள்ள இரும்பு சத்தை விட 25 மடங்கு அதிகமாகவும், வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்தை விட 2 மடங்கு அதிகமாகவும் என பல சத்துக்களை தன்னகத்தே அதிகளவு கொண்டுள்ளது.
இதனைப்போன்று தமிழ் பழமொழிகளில் முருங்கையை உண்டவன் வெறும் கையுடன் நடப்பான் என்ற பழமொழியும் நம்மிடையே வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment