Saturday, June 13, 2020

மறந்தும்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்! பெரும் ஆபத்து நிச்சயம்


அதிக இணையம், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை இன்று பார்ப்பதே கடினம் என்ற அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபுறம் பல்வேறு நன்மைகளை கொடுத்தாலும் மறுபுறம் பல்வேறு சிக்கல்களையும் கொடுக்கத்தான் செய்கிறது. நமக்கு ஏதாவது ஓன்று தேவை என்றால் உடனே கூகுளில் தேட ஆரம்பித்துவிடுகிறோம். அப்படி நாம் தேடும் சில விஷயங்கள் நமக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கூகுளில் தேடக்கூடாது என சொல்லப்படும் சில வார்த்தைகளை இங்கே காணலாம்.

1. ஆன்லைன் பேங்கிங்:

நெட் பேங்கிங் உள்ளே லாகின் செய்ய பலரும் தங்களது வங்கி பெயரை கூகுளில் தேடி அதன்மூலம் உள்ளே செல்ல முயற்சிப்பார்கள். அப்படி நீங்கள் தேடும்போது உங்கள் வங்கி இணைய முகவரி போலவே இருக்கும் போலியான இணைய முகவரிகளை காண்பித்து அதன்மூலம் உங்கள் வங்கி கடவு சொல்லை திருட வாய்ப்புள்ளது.

2 . கஸ்டமர் கேர் எண்கள்:

இணையத்தில் தேடக்கூடாது என கூறும் விஷயங்களில் ஓன்று இந்த கஸ்டமர் கேர் எண்கள். பல நேரங்களில் போலியான கஸ்டமர் கேர் எண்களை காண்பித்து அதன்மூலம் பலவிதமான ஏமாற்றுவேலைகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.

3 . ஆப்ஸ்:

உங்கள் கணினி அல்லது தொலைபேசிக்கு தேவைப்படும் ஆப்களை அதற்கான பிரத்தியேக இடங்களில் மட்டுமே தேடுவது மிக சிறந்தது. உதாரணமா உங்கள் ஆண்ட்ராய்டு போனிற்கு தேவைப்படும் செயலிகளை கூகிள் பிலே ஸ்டோரில் மட்டுமே தேட வேண்டும். கூகிள் தேடல் மூலம் தேடினால் உங்கள் போலியான ஆப்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு அதன்மூலம் உங்கள் தொலைபேசியில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் வர அதிக வாய்ப்புள்ளது.

4. வியாதி மற்றும் வியாதிக்கான அறிகுறி:

அதிகம் அறிவுறுத்தப்படும் செயல்களில் இதுவும் ஓன்று. நமது உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே அதனை கூகிள் செய்து அதில் போடப்பட்டிருப்பதை பார்த்து பலரும் அச்சம் கொள்கிறோம். நான் கூகிளில் இதைப்பற்றி படித்தேன் என மருத்துவரிடம் கூறினார்கள் கட்டாயம் உங்கள் மருத்துவர் கோவமடைந்தவை நீங்கள் பார்க்க முடியும். மேலும், கூகுளில் போடப்பட்டிற்கும் அறிகுறிகளை வைத்து ஆன்லைன்மூலம் மருந்து வாங்குவதும் மிக பெரிய தவறு.

5 . சமூக வலைத்தளங்கள்:

சமூக வலைத்தளங்களின் முகவரிகளை நீங்கள் நேரடியாக டைப் செய்து உள்ளே செல்வதுதான் சிறந்தது. சமூக வலைதள முகவரிகளை நீங்கள் இணையத்தில் தேடும்போது அச்சு அசல் உண்மையா முகவரி போலவே இருக்கும் போலியான முகவரிகள் மூலம் உங்கள் அக்கவுண்ட் கேக் செய்யப்பட்ட வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News