Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே. இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள். காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும். கொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம். எலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து பருகவும். தட்டில் காய்கறிகள் இருக்க வேண்டும். பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, சிறுதானியங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசியைத் தொட்டு சாப்பிடுங்கள். காய்கறிகள்தான் பிரதான உணவு. அரிசி போன்ற தானியங்கள் குறைவான அளவாக இருக்க வேண்டும். பாலை விட அதிக கால்சியம் தரும் உணவுகள் நிறையவே உள்ளன. கேழ்வரகு, எள்ளு, ஆரஞ்சு, புரோக்கோலி, வெண்டைக்காய், அத்தி, காராமணி, பாதாம் இன்னும் பல. பால் இல்லாத டீ, காபி சாத்தியம் என்றால் அதைக் குடியுங்கள். ஆசைக்கு வேண்டுமென்றால் ஒரு டம்ளர் நீர்த்த மோர் குடிக்கலாம்.
IMPORTANT LINKS
Friday, June 5, 2020
பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைப்பது எப்படி?
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment