Tuesday, June 16, 2020

வேலை வாய்ப்பு திறன் பயிற்சி: இணையத்தில் பதிவு செய்ய அழைப்பு

நாமக்கல்: உலக அளவில் கொரோனா நோய் தொற்று தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து, வெளிநாடுகள், இதர மாநிலங்களில் இருந்து, தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றர். அவர்களது வேலைத்திறன், முன் அனுபவங்களை கண்டறிந்து, தகுதிக்கேற்ப தனியார் துறைகளில், பணிவாய்ப்பை பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் தேர்வுகளில், அவர்களுக்கு உரிய திறன் பயிற்சி வழங்கி, தனியார் துறை நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெற உதவுவதற்கும், தேவையான நடவடிக்கைகளை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மேற்கொண்டுள்ளது. வெளிநாடுகள், இதர மாநிலங்களில் இருந்து, தாயகம் திரும்பிய தமிழர்கள், தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி, தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை பெற உதவும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இணையதளத்தில், (https://www.tnskoill.tn.gov.in) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளப்பக்கத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். விபரங்களுக்கு, 04286 - 222260 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News