Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
திருப்பூர்:சி.ஏ., பவுண்டேசன் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம் என்று திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.பள்ளி கல்வித்துறை, இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகம் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சி.ஏ., பவுண்டேசன் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றனர்.ஜூன் முதல் செப்., 20ம் தேதி வரை, மூன்று மாதங்கள் நடக்கிறது. திங்கள் முதல் சனி வரை என, ஆறு நாட்கள் காலை, 8:00 முதல், 11:15 மணி வரை மற்றும் மாலை, 5:00 முதல் இரவு, 8:15 மணி வரையில் வகுப்புகள் நடக்கிறது.
சி.ஏ., பவுண்டேசன் பாட திட்டத்துக்கு,www.icai.org இணையத்தில் பதிவு செய்து வரும் நவ., மாதம் தேர்வு எழுத விரும்புகிற மாணவர்களுக்கு இவ்வகுப்புகளில் இலவசமாக பங்கேற்கலாம்.தங்கள் குறித்த விவரங்களுடன் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றதுக்கான சான்றிதழ் அல்லது பிளஸ் 2 வகுப்பு தேர்வின் ஹால் டிக் கெட்டை ஸ்கேன் செய்து, sircclasses@icai.in என்ற இ-மெயிலுக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும்.விவரங்களுக்கு 82205 - 22669 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Saturday, June 13, 2020
C A தேர்வுக்கான 'ஆன்லைன்' வகுப்பு துவக்கம்: மாணவர்களுக்கு அழைப்பு
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment