என்எம்எம்எஸ் தேர்வு முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் முடிவு இதுவரை வெளியிடப்படாததால் உடனடியாக முடிவுகளை வெளியிட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்எம்எம்எஸ் எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தோறும் டிசம்பரில் நடத்தப்பட்டு , மார்ச் இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம்.
2019ம் ஆண்டு டிச .15ம் தேதி சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். ஆனால் , தேர்வெழுதி 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய 4 ஆண்டுகளுக்கு ரூ.ஆயிரம் வீதம் ரூ .48 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறமுடியும்.
எனவே , முக்கியம் வாய்ந்த இந்த தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
IMPORTANT LINKS
Monday, June 1, 2020
NMMS தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும் மாணவர்கள் கோரிக்கை!
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment