Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 6, 2020

மாணவர்களைப் பரிசோதனை செய்யும் தெர்மல் ஸ்கேன் கருவிகளை பள்ளிகள் PTA மூலம் வாங்க வேண்டாம்.


மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய அரசின் சார்பில் தெர் மல்ஸ்கேன் கருவி அனைத்து தேர்வுமையங்களுக்கும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே சிங்கிரிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி தமிழகத்தில் 12816 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மையங்களிலும் தேர்வு எழுதவரும் மாணவர்களைப் பரிசோதித்து உள்ளே தேர்வு மையத்துக்குள் அனுப்புவதற்கான தெர்மல் ஸ்கேன் கருவிகள் அரசின் சார்பில் வாங்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு முன்னரே மாணவ , மாணவிகளுக்கு இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்படும்.

தேர்வு எழுதுவதற்கு வரும் முன்னரும் , தேர்வு எழுதிவிட்டுச் செல்லும்போதும் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பத்து மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 10.30 மணிக்குத் தேர்வு துவங்கும். மாணவர்கள் காலை 9.45 மணிக்குப் பள்ளிக்கு வரவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 50 பேர் மட்டுமே தேர்வு எழுதுவர்.

கேரள மாநிலத்தில் இம்முறையைப் பின்பற்றியுள்ளனர். மாணவர்களைப் பரிசோதனை செய்யும் தெர்மல் ஸ்கேன் கருவியை அரசே கொள்முதல் செய்து தயார்நிலையில் வைத்துள்ளது. பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் வாங்கத் தேவையில்லை என்றார்.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment