விடைத்தாட்கள் சமர்ப்பித்தல் சார்ந்தது :
TOP Sheets .....ஒவ்வொரு மாணவருக்கும் SSLC 5 பாடங்களுக் கான காலாண்டு அரையாண்டு விடைத்தாட்களை முறையே அந்தந்த 5 பாட Top Sheet களுக்கும் கீழே தனித்தனி ஆக வைத்து இடது புற மேல் மூலையில் ஸ்டேப்பில் செய்து ஒரு மாணவருக் கான ஐந்து விடைத்தாட்களையும் வரிசையாக வைத்து கீழ்புறம் ரேங்க் கார்டினை வைத்து நூல் கொண்டு எல் வடிவத்தையல் தைக்க வேண்டும். Top Sheet ல் Part - C பகுதியில் மதிப்பெண்களை மூன்று டிஜிட் எண்ணாலும் Capital எழுத்தாலும் எழுத வேண்டும். வருகை புரிய வில்லை எனில் AAA என சிவப்பு நிறத்தில் குறித்தல் வேண்டும்.
அறிவியல் பாடத்திற்கு 75 மதிப் பெண்களுக்கு பதிவிடல் வேண்டும். 100 க்கு பதிவு செய்தல் கூடாது. அவ்வாறு பதிவு செய்திருபபின் அருகில் 75 க்கும் குறிப்பிட வேண்டும். வகுப்பு ஆசிரியரின் அனைத்துப் பாட மதிப்பெண்கள் பதிவேடு , ரேங்க் கார்டு மற்றும் விடைத்தாள்களில் மதிப்பெண்கள் வேறு பாடு இன்றி இருத்தல் வேண்டும். தேவைப்படின் 5 பாட ஆசிரியர்களின் மதிப்பெண்கள் பதிவேட்டை வைத்துக் கொள்ளல் நன்று. பின்பு பாட, வகுப்பு, ஆசிரியர் கையொப்பம் செய்து விட்டு, தலைமை ஆசிரியர் சீல் வைத்து கையொப்பம் செய்தல் வேண்டும். Top Sheet ல் வேறு எந்த ஒரு பகுதியையும் நிரப்பக் கூடாது. Packet எண் முகாமில் வழங்கப்படும் ......
இவ்வாறாக 25 மாணவர்களுக்கு விடைத்தார்கள் 5 x 25 வரிசையாக Nominal Roll படி அடுக்கி அதை ஒரு Bundle ஆக Top sheet க்கு சேதம் ஆகாத வகையில் கட்டிவைத்தல் வேண்டும்.. மார்ச் | ஜூன் 2020 தேர்வுகள் என்ற தலைப்பில் ஆன புதிய Nominal Roll கண்டிப்பாக கொண்டு வந்து பார்வைக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
சரிபார்க்கும் படிவம் ... ஒவ்வொரு Bundle க்கும் இரண்டு படிவங்கள் தயார் செய்தல் வேண்டும். 65 மாணவர்கள் எனில் 01 to 25 ஒரு படிவம் 01 to 25 (26 to 50 அல்ல) மற்றொரு படிவம் .0 to 15 படிவம் என 3 படிவங்கள் (மொத்தம் 6 Copies) ஒரு படிவத்தில் விடைத்தாள் இருக்கும் பட்சத்தில் Blue அல்லது Black நிறத்தில் டிக் செய்யவும். விடைத்தாள் இல்லை எனில் M. என்று சிவப்பில் ( Missing என்ற பொருள் பட) குறிக்கவும். வருகை புரிய வில்லை எனில் A எனவும் நீண்ட நாள் வரவும் இல்லை தேர்வுகள் எழுத வில்லை எனில் LONG ABSENT எனவும் சிவப்பில் குறிக்கவும். விடைத்தாள் அல்லது ரேங்க் அட்டை அல்லது இரண்டும் இல்லை எனில் மாணவர் வசம் உள்ளது. ஒப்படைக்கப்பட்டது என சுருக்க மாக சிவப்பில் எழுதவும். ஒவ்வொரு கட்டிற்கான ஒவ்வொரு படிவத்திலும் சம்பந்தப் பட்ட மூன்று நபர்களின கையொப்பம் கண்டிப்பாக இடம் பெறல் வேண்டும். இன்னொரு படிவத்தில் ஏதும் நிரப்பாமல் கையில் கொண்டு வருதல் வேண்டும் .......முகாமிற்கு விடைத் தாட்கள் சமர்ப்பிக்க வரும் போது சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலக முத்திரை யுடன் கண்டிப்பாக உடன் வருதல் வேண்டும்.
No comments:
Post a Comment