நாட்டில், கொரோனா (Corona) நோயாளிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் (Tamil Nadu) இன்று வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள் (Guidelines) வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான அனுமதி அளித்து சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, தமிழகம் இந்த முடிவை எடுத்துள்ளது. நாட்டில் அன்லாக்கின் (Unlock) இரண்டாம் கட்டம் துவங்கும் ஜூலை 1 அன்று, தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நோயின் அறிகுறிகள் தென்படாத மக்கள் மட்டுமே கோயில்களுக்குள் (Temples) அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு பொது இடத்திற்கோ அல்லது வழிபாட்டுத் தலங்களுக்கோ செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். சிலைகளைத் தொடுவது, பிரசாத விநியோகம், தேங்காய் உடைப்பது, புனித நீரைத் தெளித்தல் ஆகியவை கோயில்களில் செய்யப்படாது என்று பழனிசாமி (E Palanisamy) அரசாங்கம் கூறியுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ளபடி கடுமையான தனிமனித இடைவெளி பராமரிக்கப்படும்.
கட்டிப்பிடிப்பது, கைகுலுக்குவது, தோளோடு தோள் இடிக்கும் படி அமர்வது ஆகியவற்றை முற்றிலுமாக தடுக்க வேண்டும். மக்கள் தங்கள் காலணிகளை தங்கள் வாகனங்களிலேயே விட்டுவிட்டு வரவும், பிரார்த்தனை செய்ய சொந்த பாய்களைக் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் பதிவு செய்யப்பட்ட இசை மட்டுமே இசைக்கப்படும். எந்தவொரு நேரடி இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படாது.
சுவாச துளிகளால் பரவுகின்ற வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சறிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே!! மக்கள் போதிய இடைவெளி விட்டு நின்று, தரிசனம் செய்துவிட்டு செல்ல வேண்டும்.
கூட்டமாக நின்று வழிபடுவதோ, கோயில் வளாகத்தில் கூட்டமாக நின்று பேசுவதோ அனுமதிக்கப்படாது. நியமிக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள நன்கொடை பெட்டிகளில் மட்டுமே, சமூக இடைவெளியை பின்பற்றி நன்கொடைகளை செலுத்த வேண்டும். பக்தர்கள் உள்ளே நுழையும் முன்னர், நுழைவாயிலில் கைகளைக் கழுவ வேண்டும், முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும், ஒருவருக்கொருவர் 2 மீட்டர் இடைவெளியை (Social Distancing) கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், தொற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மதக் கூட்டங்கள் மற்றும் அதிக மக்கள் கூட்டம் கூடும் பிற சந்தர்ப்பங்களையும் வெளிப்படையாகத் தடை செய்திருந்தன. வழிபாட்டுக் கூட்டங்கள், மத சபைகள் உட்பட பெரிய கூட்டங்கள் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment