கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித் துறையின் பாடத்திட்டங்களை கவனிக்கும் துறையான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் உமா, மூன்று மாதங்களுக்கு மருத்துவ விடுப்பில் சென்றார்.
மார்ச், 2 முதல் ஜூன், 30 வரையிலான, அவரது விடுப்பு முடிந்து, பணியில் சேர்ந்தார். அவரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக மாற்றம் செய்து, பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment