பள்ளி சத்துணவுக்கான மானியத் தொகையை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த முடிவு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் சத்துணவு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவர்கள் வங்கி கணக்கில் மானிய தொகையை செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எத்தனை நாட்களுக்கான மானியத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. மேலும் மானியம் வழங்குவதம் மூலம் 42,62,124 மாணவர்கள் மானிய தொகையை நேரடியராக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment