Join THAMIZHKADAL WhatsApp Groups
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது பள்ளி, கல்லூரிகளுக்கும் பொருந்தும். மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சுமையை குறைக்க சிபிஎஸ்சி (CBSE) அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியுள்ளது.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து, 'தற்கால உலகில் பாதுகாப்பு', 'சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள்', 'இந்தியாவில் சமூக மற்றும் புதிய சமூக இயக்கங்கள்' மற்றும் 'பிராந்திய அபிலாஷைகள்' ஆகியவற்றை சிபிஎஸ்சி முற்றிலுமாக நீக்கியுள்ளது.
9 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக உரிமைகள் மற்றும் கட்டமைப்பு பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 'ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை', 'சாதி, மதம் மற்றும் பாலினம்' மற்றும் 'ஜனநாயகத்திற்கு சவால்கள்' பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment