Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 8, 2020

தைராய்டு பிரச்சனை இருக்குதா? அப்ப இந்த ஜூஸை தினமும் மறக்காம குடிங்க...

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கழுத்துப் பகுதியில் பட்டாம் பூச்சி வடிவில் உள்ள தைராய்டு சுரப்பி உடலின் பல செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் தைராக்ஸின் ஹார்மோன்கள் உடலின் மெட்டபாலிசத்தை சீராக்கவும், உடல் வெப்பநிலை, ஆற்றல் அளவு மற்றும் உடல் எடையை சரியாக பராமரிக்கவும் உதவக்கூடியது. ஒருவரது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாமல் இருந்தால், அது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.


ஒருவரது தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதில் உடலுக்கு தேவையான அளவை விட அதிகமான ஹார்மோன்களை தைராய்டு சுரந்தால், அது ஹைப்பர் தைராய்டிசம் என்றும், குறைவான அளவில் ஹார்மோன்களை சுரந்தால், அது ஹைப்போ தைராய்டிசம் என்றும் அழைக்கப்படும்.

தைராய்டு பிரச்சனை வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனை. ஒரு நல்ல செய்தி என்னவெனில், தைராய்டு பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சையை எடுத்து வந்தால், பெரும்பாலான சந்தர்பங்களில் நிர்வகிக்க முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வது ஆகியவை தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

கீழே உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் இரண்டு அற்புத பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பானங்கள் தைராய்டு பிரச்சனையை குணப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல், நிணநீர் மண்டலம் மற்றும் செரிமான மண்டலத்திற்கும் ஆதரவாக இருக்கும்.

எலுமிச்சை நீர்

ஆயுர்வேதத்தில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிப்பது உடலை சமநிலையில் பராமரிக்கவும், நச்சுக்களை நீக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு, உடலில் pH அளவை சமநிலையில் பராமரிக்கவும், சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுக்கூடியது. தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக செயல்படுவதற்கு வைட்டமின் சி போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் மிகவும் அவசியமாகும்.

எலுமிச்சை நீரை தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் ஒரு எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து கலந்து குடிக்க வேண்டும். இந்த பானத்தை காலை உணவை உட்கொண்ட சிறிது நேரம் கழித்தும், மதிய உணவிற்கு பின்பும் குடிப்பது நல்லது.

செலரி ஜூஸ்

செலரியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், தைராய்டு சுரப்பி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆதரவாகவும் இருக்கும். அறிக்கை ஒன்றின் படி, செலரிக்கு தைராய்டு சுரப்பியை சேதப்படுத்தும் வைரஸை வெளியேற்றும் திறன் உள்ளது தெரிய வந்தது. இந்த கலோரி குறைவான காய்கறி, தைராய்டு ஹார்மோன் T3 உற்பத்தியையும் ஆதரிக்கக்கூடும்.

செலரி ஜூஸ் தயாரிப்பது எப்படி?
.
ஒரு கட்டு செலரியை எடுத்துக் கொண்டு, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை பிளெண்டரில் துண்டுகளாக வெட்டிப் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு ஏராளமாக உள்ளது.


குறிப்பு:

ஹைப்பர் தைராய்டிசம் அல்லது ஹைப்போ தைராய்டிசம் பிரச்சனைக்கு என்று பிரத்யேகமாக எந்த ஒரு டயட்டும் இல்லை. ஆனால் ஒருசில உணவுகளைத் அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், தைராய்டு பிரச்சனை தீவிரமடைவது தடுக்கப்படும். ஆனால் தைராய்டு பிரச்சனை இருந்தால், உங்களின் டயட்டில் மாற்றங்களை மேற்கொள்ளும் முன், உங்கள் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். ஏனெனில் சில உணவுகள் நீங்கள் எடுக்கும் மருந்துகளில் இடையூறை ஏற்படுத்தி, நிலைமையை மோசமாக்க வாய்ப்புள்ளது.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top