பேஸ்புக், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களை மேலும் ஈர்க்கும் வகையில் புதிய புதிய அப்டேட்டுகளை அந்நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் சில புதிய அப்டேட்டுகளை இனி வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. பயனளர்கள் அனிமேஷன் ஸ்டிக்கருடன் உரையாடும் வகையிலான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல் QR code பயன்படுத்தி ஒருவரை தொடர்பு கொள்ளும் முறையும் அறிமுகமாகவிருக்கிறது.
நீங்கள் புதிதாக ஒருவரை உங்கள் செல்போன் தொடர்பில் சேர்க்கும் போது எண்ணை வாங்கி டைப் செய்ய தேவையில்லை. அவரது QR code-ஐ ஸ்கேன் செய்தால் தானாக உங்கள் வாட்ஸ் அப்பில் அவர்களது தொடர்பு இணைந்து விடும்.
சமீபத்தில் வீடியோ காலில் எட்டு பேர் இணைந்து பேசும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது. கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் ஒருவருக்கொருவர் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் இந்த சேவை வழங்கப்பட்டது.
அதே போல் குரூப் வீடியோ காலில் உள்ளவர்களில் குறிப்பிட்ட நபரின் வீடியோவை திரையில் பெரிதாக்கும் வசதியும் விரைவில் வரவிருக்கிறது. மேலும் எட்டு உறுப்பினர்களை கொண்ட குழுக்களில் வீடியோ ஐகானை தட்டுவதன் மூலம் ,
வீடியோ அழைப்பை நேரடியாக தொடங்க முடியும். எட்டு உறுப்பினர்களை தனித்தனியாக சேர்ப்பதற்கு பதிலாக இப்படி செய்து கொள்ளலாம். இந்த சேவைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment