Wednesday, July 8, 2020

ஆம்புலன்ஸ் டிரைவர்,நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை - உடனே அப்ளை பண்ணுங்க


சென்னை: 108 ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க கைமேலே வேலையை வாங்குங்க.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், லாக்டவுன் காரணமாகவும் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்டோ, கார், டாக்சி டிரைவர்களுக்கு வேலையிழப்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவத் துறையில் மட்டும் தொடர்ந்து பணி வாய்ப்புகள் உருவாகிவருகின்றன.

அண்மையில் நர்ஸ்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது 108 ஆம்புலன்ஸ், டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன உரிமம் எடுத்து 3 ஆண்டுகள் மற்றும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டு ஆகியிருக்க வேண்டும். 24 முதல் 34 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணிக்கு 93840 10215, 73977 24763, என்ற எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

பி.எஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் முடித்த 19 முதல் 30 வயதினர் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தொலைபேசி வாயிலாக தேர்வுகள் நடைபெறும். மருத்துவ உதவியாளர் பணிக்கு 73977 24807, 73977 24809, 73977 24812, 73977 24810, 87544 35247 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிகள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 13 வரை இந்த எண்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 7397724805 மற்றும் 9344543276 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளுங்கள். 12 மணி நேர ஷிப்ட் முறையில் வேலை செய்ய வேண்டும் பகல், இரவு ஷிப்ட்களில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிங்க கை மேலே வேலையை வாங்குங்க.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News