Friday, July 3, 2020

புதிய கல்லூரிகள், பாடப்பிரிவு தொடங்க அனுமதியில்லை! - தமிழக உயர் கல்வித் துறை அமைச்சகம் தகவல்


பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்றே தெரியாத நிலையில், இந்த ஆண்டு புதிதாக கல்லூரிகள், பாடப்பிரிவுகள் தொடங்க அனுமதியில்லை என்ற தமிழக உயர் கல்வித் துறை அறிவித்திருக்கிறது.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் புதிதாக சில கல்லூரிகள் திறக்கப்படுவதும், பல கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படுவதும் வழக்கும்.

கலை, அறிவியல் கல்லூரிகளைப் பொருத்தவரை அதற்கு பல்கலைக் கழக மானியக்குழு இதற்கான அனுமதியை வழங்குகிறது. யு.ஜி.சி அளிக்கும் அனுமதி அடிப்படையில் தமிழக அரசு பாடத்திட்டம், கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை வழங்கும். இந்த ஆண்டும் இப்படி பல புதிய கல்லூரிகள் தொடங்க நாடு முழுவதும் இருந்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதே போல், கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவு தொடங்கவும் ஆயிரக் கணக்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்கள் மீது பல்கலைக்கழக மானியக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரிகள் தரப்பிலிருந்து தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. “இந்த ஆண்டு புதிதாக கல்லூரி திறக்க, புதிய பாடப் பிரிவுகள் தொடங்க அனுமதி அளிப்பது இல்லை என்று பல்கலைக் கழக மானியக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது” என்று தமிழக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News