குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமிழக அரசு மாணவ, மாணவியர்களின் கல்விக்காக தனி தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் இன்று மாணவ, மாணவியர்களின் கல்விக்காக தனி தொலைக்காட்சி சேனல் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரிஸ்கில், மாவட்ட தலைவர் பதில்சிங், மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூரியதாவது: கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடப்பு ஆண்டு மற்றும் நிலுவையிலுள்ள கல்வி கட்டணங்களை பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது.
மாணவர்களில் உளவியல் நலன் கருதி ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது.
இவ்வாறு கட்டணம் வசூலிக்கும், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார பாரபட்சமின்றி அனைத்து மாணவர்களும் கல்வியை பெற்றிட வழி வகுக்கும் வகையில் தமிழக அரசு கல்விக்கான தனி தொலைக்காட்சி சேனலை தொடங்க வேண்டும். இதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனர்.
Source : www.hindutamil.in
No comments:
Post a Comment