Thursday, July 9, 2020

நீட், ஜே.இ.இ, பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான விதிமுறைகள் அறிவிப்பு.


நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்கள்,கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான ஜே.இ.இ தேர்வு, மருத்துவபடிப்பிற்கான நீட் தேர்வு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் நடக்க இருக்கும் நிலையில் தேர்வுகளை நடத்துவதக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகளை நடத்தும் அனைத்து தேர்வு அமைப்புகளும் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளத


ஹால் டிக்கெட் மற்றும்அடையாள அட்டைகளை, 'இ - பாஸ்' ஆக மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தேர்வு மையத்தின் அனைத்து இடங்களையும், கிருமி நாசினி தெளித்து, நோய் பரவலை தடுக்க வேண்டும். மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உரிய தரமான முக கவசம் அணிய வேண்டும். தேர்வு மைய வளாகம் தேர்வு அறை போன்றவற்றில், கிருமி நாசினி பாட்டில்கள் வைக்கப்பட வேண்டும். கழிப்பறைகளில், கை கழுவ சோப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவு மாணவர்களுக்கான தேர்வு முடிந்ததும், இருக்கைகள் மற்றும் மேஜைகளை, கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News