Thursday, July 9, 2020

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கல்யாண முருங்கை


நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளில் கல்யாண முருங்கை இலையும் முக்கியமானதாக இருந்து வருகிறது. முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு என்று பல பெயர்களிலும் கல்யாண முருங்கை மரங்கள் அழைக்கப்படுகின்றன. 

அகன்ற பச்சை நிற இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரிவழங்கும் மூலிகை என்றே சொல்லலாம்.

இலை, விதை, பூ, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்ட கல்யாண முருங்கை மரங்கள் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. இதுதவிர நகர்ப் பகுதிகளிலும் சில சில பகுதிகளில் கல்யாண முருங்கை மரங்கள் உள்ளன.

இந்த மர இலைகளுடன் பச்சரிசி, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஆடாதொடா இலை போன்றவற்றையும் சேர்த்து அரைத்து வடை, அடை போன்ற உணவுகளாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் இந்த இலையுடன் முருங்கை இலை, பூண்டு, மிளகு வைத்து சூப் செய்தும் குடிக்கிறார்கள். இதனால் சளி, இருமல் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News