' பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகளை விமர்சித்து , பேட்டி அளிக்கக்கூடாது ' என , இரண்டு வாரங்களுக்கு முன் , ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு இருந்தார் .
பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த மாவட்டம் , ஈரோடு என்பதால் , இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் , 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாகவும் , ' கிரேடு ' முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து , தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு , பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் , ' மெமோ ' அனுப்பியுள்ளார் .
No comments:
Post a Comment