Friday, July 10, 2020

குழந்தையின்மையை போக்கும் ஆவாரபஞ்சாங்கம்


பொதுவாக ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோய்களை குணப்படுத்தும் என கூறுவார்கள். ஆனால் இந்த ஆவாரைப்பஞ்சாங்கத்தை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் இவை அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும். குழந்தையின்மை பிரச்னை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.

உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும்.
மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும். ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News