இந்தியாவில் உணவை கையால் சாப்பிடுவது தான் பாரம்பரிய வழக்கம். இந்தியாவில் மட்டுமின்றி, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பகுதிகளிலும் கையால் சாப்பிடுவது தான் வழக்கம். இந்த பகுதிகளில் பலர் ஸ்பூன், போர்க் மற்றும் கத்தி பயன்படுத்தி உணவை அருந்தமாட்டார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் நாகரீகம் என்ற பெயரில், நமது பாரம்பரிய பழக்கங்கள் பல மறைந்து போய் கொண்டிருக்கின்றன. ஆனால் நம் முன்னோர்கள் இப்படி கையால் உணவை அருந்தியதற்கு பின்னணியில் பல நன்மைகள் உள்ளன.
ஆம், நாம் உணவை கையால் உண்பதால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். உண்ணுதல் என்பது உணர்வுபூர்வமான மற்றும் கவனமுள்ள செயல்முறையாகும். அதாவது உணவை உண்ணும் போது நாம் அனைத்து உணர்வுகளையும் பயன்படுத்தி சாப்பிடுகிறோம்.
நாம் உணவை கையால் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்
ஒருவர் உணவை கையால் சாப்பிடும் போது, உணவு, உடல், மனம் மற்றும் ஆன்மா என அனைத்தையும் ஒன்றிணைக்கிறது. மேலும் இது சாப்பாட்டு இங்கிதத்தை மென்மையாக்குகின்றன.
இந்த காரணத்தினால் தான், பல மேற்கத்திய நாடுகளில் கைகளில் உணவை சாப்பிட ஊக்குவிக்கிறார்கள். சிலர் கைகளில் சாப்பிடுவது அசுத்தமானதாகவும், அறுவெறுக்கத்தக்கதாகவும் நினைக்கின்றார்கள்.
ஆனால் கையால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்தால், இனிமேல் அப்படி நினைக்கமாட்டார்கள்.
உண்ணுதல் என்பது உணர்வு மற்றும் பேரார்வத்தைத் தூண்டும் ஒரு உணர்வுபூர்வமான அனுபவமாகுமாம்.
ஆயுர்வேதத்தின் படி, கையில் உள்ள ஒவ்வொரு விரலிலும் ஐந்து கூறுகள் இருக்கிறதாம்.
பெருவிரல் - ஆகாயம்
ஆள்காட்டி விரல் - காற்று
நடுவிரல் - நெருப்பு
மோதிர விரல் - தண்ணீர்
சுண்டு விரல் - நிலம்
என்று வகைப்படுத்தப்படுள்ளது.
கையால் உணவை சந்தோஷமாக சாப்பிடும் போது, இந்த ஐந்து கூறுகளும் தூண்டப்பட்டு, நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது.
ஒருவரது உடலில் இந்த ஐந்து கூறுகளும் சமநிலையில் இருந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த ஐந்து கூறுகளும் ஒருவரது சுறுசுறுப்பை அதிகரிக்கும். அதாவது கையால் உணவை உட்கொள்ளும் போது, உணவின் சுவை, தோற்றம் மற்றும் மணம் போன்றவை மேம்பட்டு இருக்குமாம்.
கத்தி, ஸ்பூன், போர்க் போன்றவற்றைக் கொண்டு சாப்பிடுவது ஒரு வகையான மெக்கானிக்கல் செயல்முறையாகும். இப்படி சாப்பிடும் போது அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்காது.
அதே சமயம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்றும் கவனிக்கமாட்டோம்.
உணவின் மீது கவனத்தை செலுத்தமாட்டோம். இதன் விளைவாக அதிகமாக உணவை உட்கொள்ள நேரிட்டு, உடல் பருமன் அதிகரித்துவிடும்.
அதுவே கையில் சாப்பிடும் போது, எவ்வளவு உணவை சாப்பிடுகிறோம், எவ்வளவு ருசியாக உள்ளது என்பதை நன்கு கவனித்து, அனுபவித்து சாப்பிட முடியும்.
மேலும் கையால் சாப்பிடும் போது, பல வேலைகளில் ஈடுபட முடியாது. இதன் விளைவாக உடல் பருமனும் அதிகரிக்காது.
நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
கையால் சாப்பிடும் முன், மறக்காமல் கைகளைக் கழுவ வேண்டும்.
கைகளைக் கழுவாமல் சாப்பிட்டால், அந்த உணவை சுகாதாரமற்ற/ஆரோக்கியமற்ற உணவிற்கு இணையாகிவிடும்.
சமையலில் சேர்க்கும் உணவுப் பொருட்களை மிதமான அளவில் துண்டுகளாக்கிக் கொண்டால், உணவை எளிதில் கையால் எடுத்து சாப்பிட முடியும்.
கையால் உணவை சாப்பிடும் போது, வளைந்து கொண்டு உணவை உட்கொள்ளாதீர்கள்.
நேராக அமர்ந்து சாப்பிடுங்கள் மற்றும் மேஜைக்கு மேலே தூக்கிக் கொண்டு இருக்காமல், இணையாக இருக்குமாறு வைத்து சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment