Tuesday, July 7, 2020

சம்பளமின்றி தவிக்கும் கவுரவ விரிவுரையாளர்கள்



கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ஜூன் முதல் சம்பளம் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில், தமிழக உயர் கல்வி துறைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில், சுழற்சி முறையில், கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாதம்தோறும், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.கொரோனா பிரச்னையால், கல்லுாரிகள் திறக்கும் தேதி தள்ளி போயுள்ளது.

தேர்வு பணியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால், கவுரவ விரிவுரையாளர்கள், ஏப்ரல் முதல் எந்த ஊதியமும் இல்லாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.எனவே, தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஜூன் முதல் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News