அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை ) தலைமையாசிரியர்கள் , தங்கள் பள்ளியில் உள்ள கடைசி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ( 5,8,10,12 ) மற்றும் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கும் மா ற் றுச்சான்றிதழ் கொடுப்பதற் கான அனைத்து விவரங்களையும் EMIS வலைதளத்தில் Students Students TC details வழியாக மாணவர்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . Save கொடுக்கப்பட்ட பிறகு தவறுகள் இருப்பின் திருத்தம் செய்ய இயலாது என்பதை தெரிவிக்கப்படுகிறது . ஆகவே உள்ளீடு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பதை தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் உறுதி செய்த பின்னரே Save கொடுக்கப்படவேண்டும் . மாணவர்களை Common Pool க்கு மாற்றும் பொழுது மாற்றுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்தகவலை அனைத்து வகைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் முறையாக தெரிவிக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment