Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 8, 2020

நாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'; 17ல் மதிப்பெண் சான்றிதழ்


சென்னை; 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாகும்' என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா வைரஸ் பிரச்னையால், மார்ச், 27ல் நடத்தப்படவிருந்த பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. 

குறுஞ்செய்திபின், நிலைமை சீராகாததால், தேர்வை ரத்து செய்து, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்றும், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்ணை சராசரியாக கணக்கிட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், பள்ளி கல்வித் துறை அறிவித்தது.

இந்நிலையில், தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாக உள்ளன. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் காலை, 9:30 மணிக்கு வெளியாகின்றன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 

மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், தேர்வு முடிவு அனுப்பப்படும்.தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 17ம் தேதி முதல், 21 வரையிலான நாட்களில், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மதிப்பெண் குறைவா?பொதுத் தேர்வு முடிவுகள், ஏற்கனவே நடந்த பள்ளி தேர்வுகளின் அடிப்படையில் வெளியிடப்படுவதால், மறுகூட்டல் கிடையாது. 

அதற்கு பதில், தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் தெரிந்தால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக தெரிவிக்க வேண்டும்.இதற்கு, 17ம் தேதி முதல், 25 வரையில், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், குறை தீர்க்கும் படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். பின், அதற்கான முடிவுகள், தலைமை ஆசிரியர்கள் வழியாக தெரிவிக்கப்படும் என்று, அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News