பள்ளியில் பயிலும் படிப்புத்திறன் குறைந்த மாணவர்களை பொதுத் தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத வைப்பது என்பது விதிகளை மீறிய நடவடிக்கையாகும். சில தனியார் பள்ளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்று தங்கள் பள்ளியில் பயின்ற பார்வையற்ற மாணவர்கள் நால்வர் உட்பட 20 மாணவர்களை தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க செய்துள்ளனர்.
தங்கள் பள்ளி 100 சதவிகித தேர்சியினை பெற வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையினை தனியார் பள்ளி எடுத்துள்ளது. இதனால் அந்த மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாமல் போனதுடன் 11ம் வகுப்பிலும் சேர முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்க்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment