தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தான நிலையில், அரசு அறிவித்தபடி 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு, மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளில் வழங்கிய மொபைல் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும்.
அரசு அறிவிப்பின்படி, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 9 லட்சத்து 39ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 68ஆயிரத்து 70 மாணவிகள், 4 லட்சத்து 71ஆயிரத்து 759 மாணவர்கள் இதில் அடங்குவர்.
மறுகூட்டல் கிடையாது என்பதால் மதிப்பெண் சார்ந்த குறைகள் இருப்பின் ஆக.17-25 வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்கள் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்களை இணைய தளத்தில் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். வரும் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் தங்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 10 ஆயிரத்து 742 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
சென்னையில் மட்டும் 49 ஆயிரத்து 369 பேர் விண்ணப்பித்தனர். புதுச்சேரியில் 299 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 521 பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் தவிர சிறைக் கைதிகள் 144 பேரும், 6,184 டிஸ்லெக்சியா உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்களும் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
இவர்கள் யாரும் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதாத நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இன்று காலை 9.30 மணிக்கு ரிசல்ட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
பொதுத்தேர்வு முடிகளை பார்க்க:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
No comments:
Post a Comment