Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 10, 2020

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது தமிழக தேர்வுத்துறை!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை தமிழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் 10 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது, இந்நிலையில் இன்று 9.45 லட்சம் பேரின் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு, வருகைப்பதிவேடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
மதிப்பெண் விவரங்களை www.dge1.tn.gov.in, www.dge2.tn.gov.in என்ற இணையதளங்கள் வழியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17ம் தேதி முதல் பள்ளிகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

10 வகுப்பு தேர்வை எழுத 9,45,006 விண்ணப்பித்திருந்தனர். அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 9,39,829 பேரின் தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியாகி உள்ளது. மீதமுள்ள 5,177 பேரின் தேர்ச்சி முடிவுகள் குறித்து தகவல் இல்லாததால் குழப்பம் நீடிக்கிறது, மேலும் தனித்தேர்வர்களின் நிலை குறித்தும் தேர்வுத்துறை இதுவரை விளக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News