தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
மேலும்மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தினையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆக.31 முதல் செப்.2ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் உரிய கட்டணத் தொகையை விண்ணப்பத்தோடு ஒப்படைக்க வேண்டும் என தகவல் தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பம் அதே இணையதளத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்கள் மட்டுமே மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டல் II க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மறுமதிப்பீடு
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.505/-
மறுகூட்டல்-II
உயிரியல் பாடம் மட்டும் - ரூ.305/-
ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
No comments:
Post a Comment