Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 24, 2020

வரும் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. பத்து நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக களையிழந்துள்ளது. பண்டிகையை மக்கள் வீடுகளுக்குள் மட்டுமே கொண்டாட வேண்டும்; பொது இடங்களில் ஓணம் கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கேரளா அரசு விதித்துள்ளது.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் ஓணம் பண்டிகையான வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டார்.

உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக அறிவிக்கப்படும் வேலை நாளானது பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News