Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 10, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - 5177 மாணவர்கள் என்ன ஆனார்கள்...?

கடந்த ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் நடத்தி, தேவையான கருத்துக்கள் கேட்டறியப்பட்டு மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அனைவரும் தேர்ச்சி என அறிவித்துவிட்டதால் தற்போது மதிப்பெண் விபரங்கள் மட்டும் வெளியாகியுள்ளன. மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,. tnresults.nic.in , dge 1.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாகவும், பள்ளிகள் மூலமாகவும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம். 9,39,829 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய நிலையில், 4,71,759 மாணவர்களும், 4,68,070 மாணவியரும் இதில் அடங்குவர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



மாவட்ட வாரியாக விபரங்கள்



6,235 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், தேர்வெழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. 27.3.2020 அன்று தேர்வுத்துறை வெளியிட்ட விவரங்களின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 9,45,006 என குறிப்பிடப்பட்டிருந்தது.இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் தேர்வுத்துறை தெரிவித்துள்ள தகவல்களின்படி தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 939,829 என உள்ளது.

மீதமுள்ள 5177 மாணவர்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விக்கு தேர்வுத்துறைக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News