கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதன் படி இன்று தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டது. தேர்வுக்கு முன்பு 9,45,006 மாணவர்கள் தேர்வு எழுதுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று வெளியான தேர்வு முடிவில் 9,39,829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், மீதி 5177 பேர் என்ன ஆனார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “இந்த ஆண்டு தேர்வு எழுதப் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 45 ஆயிரத்து 77. இதில், 231 பேர் தேர்வு எழுதப் பதிவு செய்ததற்கு பின்னர் இயற்கை எய்தியுள்ளனர்.
658 பேர் மாற்றுச் சான்றிதழ் பெற்று பள்ளியிலிருந்து நின்றுவிட்டனர். 4359 பேர் காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஒரு பாடங்களைக் கூட எழுதவில்லை.
இதனால், 5248 பேரை கழித்துவிட்டு 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளது.
இதன் மூலம் காலாண்டு, அரையாண்டில் ஒரு பாடம், இரண்டு பாடம் தேர்வு எழுதாத மாணவர்கள் கூட தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தெளிவாகிறது.
No comments:
Post a Comment