தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி நடைபெறவிருந்தது. கொரோனா பேரிடர் காரணமாக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே, பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களது செல்போன் எண்ணுக்கே அனுப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்ககளை வரும் 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். மறுகூட்டல் கிடையாது என்பதால் மதிப்பெண் தொடர்பான புகார்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்கள் தெரிவிக்கலாம்.
இந்த நிலையில், இன்று வெளியான தேர்வு முடிவுகள் அடிப்படையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத் தேர்வை எழுதிய 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவ, மாணவிகளில், 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 மாணவிகளும், 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலமாக மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
IMPORTANT LINKS
Monday, August 10, 2020
Home
கல்விச்செய்திகள்
முதல்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள்... வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!!
முதல்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள்... வெளியானது 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!!
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment