இந்தியாவில் கடந்த 36 ஆண்டுகளாக அமலில் உள்ள கல்வி முறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான புதிய தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்து உள்ளது. இதற்கான வரைவு அறிக்கை சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதற்கு பலர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையை மத்திய அரசு நேற்று எடுத்தது. இக்கல்விக் கொள்கை பற்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களின் கருத்தை கேட்டறிய முடிவு செய்துள்ளது.
இதை கேட்டறிய மத்திய கல்வி அமைச்சகம் https://Innovateindia.mygov.in/nep2020 என்ற புதிய இணைப்பை தொடங்கி உள்ளது. இந்த இணைப்பு மூலம் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
ஆனால், பொதுமக்களிடம் இது பற்றி கருத்து கேட்கப்படாதது ஒருதலைபட்சமானது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டரில், 'தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. எனவே, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களின் கருத்தை கேட்டறிய முடிவு செய்துள்ளோம்,' என கூறியுள்ளார்.
Fantastic policy
ReplyDelete