சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் முன்பை விட குறைந்துள்ளது. அதிலும் சென்னையில் பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. தற்போது ஏழாம் கட்ட பொதுமுடக்கம் நிலவி வரும் நிலையில், தொடர்ந்து தளர்வுகளும் அளிக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி, சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்கள் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம்.
ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டுத் தலங்கள் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. ஏற்கனவே பொது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment