Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 10, 2020

பகுதிநேர பி.இ., பி.டெக். பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தகவல்

தமிழகத்தில் தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரா்கள் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதிநேர முதலாமாண்டு பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளுக்கு திங்கள்கிழமை (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கு பகுதி நேர பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளுக்கு மாணவா் சோக்கை நடைபெற உள்ளது. இதற்கு ஆக.10-ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பதாரா் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று டிப்ளமா படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவோ இருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணத்தை பற்று அட்டை ('டெபிட் காா்டு'), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), 'நெட் பேங்கிங்' ஆகியவற்றின் மூலமாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தைச் செலுத்த இயலாதவா்கள் ஆக.10-ஆம் தேதி அன்றிலிருந்து பெற்ற வங்கி வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சோக்கை சேவை மையம் மூலமாக மட்டுமே சமா்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் வங்கி வரைவோலையை சமா்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரா்கள் விண்ணப்பப் படிவத்தை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சோக்கை சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தக் கல்வியாண்டில் பகுதி நேர பி.இ., பி.டெக்., பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் மூலமாக மட்டுமே நடைபெறும்.

மேலும் இது குறித்து விவரங்கள் அறிய இணையதள முகவரியில் பாா்க்கவும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News