உடல் உஷ்ணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த துத்திக் கீரை சீரகச் சூரணத்தைத் தினமும் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
துத்திக் கீரை ( நிழலில் உலர்த்தியது) - 500 கிராம்
சீரகம். - 25 கிராம்
மிளகு. - 10 கிராம்
மஞ்சள். - 10 கிராம்
செய்முறை
முதலில் துத்திக் கீரையை ஆய்ந்து எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுத்தப்படுத்திய பின்பு அதனை நிழலில் நன்கு உலர வைக்கவும். சீரகம் மற்றும் மிளகைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
மஞ்சளைத் தூளாக்கிக் கொள்ளவும். பின்பு நன்கு உலர்ந்த துத்திக் கீரையுடன் சீரகம், மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து ஒன்றாக கலக்கி அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் மூல நோய்களை குணப்படுத்த உதவும் அருமருந்தாகும். மேலும் உஷ்ணம் சார்ந்த குறைபாடுகள் அனைத்தையும் நீக்க உதவும் மருந்தாகவும் உணவாகவும் இருக்கும். மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை மற்றும் இரவு என இருவேளையும் தலா 5 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்ட பின்பு குடித்து வரவும்.
மேற்கூறிய சூரணம் துணை உணவாக பயன்படக்கூடியது. நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
No comments:
Post a Comment