உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது போல் தலைமுடியையும் பராமரிக்க வேண்டியது அவசியம்.
முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். முடிவேர்க்கால்கள் வலுவாக இருந்தால்தான் அதிக அளவில் உதிர்வதை தடுக்க முடியும். வெறும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதை விட, இன்னும் சில பொருட்கள் சேர்த்து வீட்டிலேயே தயாரிக்கப்படும் எண்ணெய்களை பயன்படுத்துங்கள். ஆயுர்வேத சிகிச்சையாளரும், உணவியல் நிபுணருமான மருத்துவர் திக்ஷா பாவ்சர் தலைமுடிக்கான எண்ணெய் ஒன்றை தயாரிக்கும் முறையை பகிர்ந்து கொண்டுள்ளார். உங்கள் முடி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு இதனை முயற்சித்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்- 2 கப்
எள் எண்ணெய்- அரை கப்
விளக்கெண்ணெய்- அரை கப்
கறிவேப்பிலை (சிறிதளவு)
நெல்லிக்காய்
வெந்தயம்- 1 டீஸ்பூன்
செம்பருத்தி பூ- 4
செம்பருத்தி இலை (சிறிதளவு)
செய்முறை:
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நிறம் மாறும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். அவற்றில் உள்ள சாறு அனைத்தும் எண்ணெயில் நன்றாக கலக்கும் வரை அப்படியே வைத்திருக்கவும்.
அதன்பிறகு அதனை சிறிது நேரம் குளிர வைத்து விட்டு, வடிகட்டிக் கொள்ளவும்.
அதனை ஒரு கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்:
இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். இல்லையென்றால் நீங்கள் தினமும் கூட பயன்படுத்தலாம்.
அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
No comments:
Post a Comment