Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 25, 2020

பார்வைத் திறன் அதிகரிக்க, சிறுநீர் எரிச்சல், சிறுநீரகத்தில் கற்கள் நீங்க "கோபுரம்தாங்கி மூலிகை"


நமது உடல்கோபுரத்தை தாங்கி நிற்கக்கூடிய கால்களை நாம் வலிமையாக வைத்துகொள்ளவது அவசியம். பெரும்பாலும் 40 வயதுக்கு மேல் பலருக்கு கால் சம்பந்தமான பிரச்சனைகள் வரும். இதை சமாளிக்க தற்போது பலர் ஆங்கில மருத்துவத்துக்கு மாரி வருகின்றனர்.

ஆனால் இதற்கு இயற்கை மருத்துவதிலேயே வலுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. கோபுரம்தாங்கி மூலிகை எனப்படும் இந்த மூலிகை சிறப்பாக செயல்படுகின்றது.  

இந்த மூலிகையின் இலைப்பொடியுடன், சம எடை வில்வ இலைப்பொடி,சம எடை பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் 40 நாளில் உடலில் மாற்றங்கள் நிகழ்வதை உணர முடியும்.

இலைச்சாறு 100 மிலி,
நல்லெண்ணெய் 100மிலி

கலந்து பதமுற காய்ச்சி வாரம் இருமுறை தலை குளித்துவநதால் முடி உதிர்வு நின்று வளர ஆரம்பிக்கும். கண் குளிர்ந்து பார்வைதிறன் அதிகரிக்கும்.

கோபுரந்தாங்கியின் இலையும் கொட்டைகரந்தையின் இலையும் சம எடை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு 100மி லிட்டராக காய்ச்சி தினமும் காலை குடித்துவந்தால் உடல் காய கற்பமாகி விடும்.

சிறுநீர் போகும்போது எரிச்சல்,சிறுநீரகத்தில் கற்கள் போன்ற உபாதைகளுக்கு சித்த,ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுகிறது. உலோகங்களை கரைக்கும் ஆற்றல் கொண்டதால் சித்த மருத்துவத்தில் பஸ்பங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

கோபுரந்தாங்கி, சிறுபீளை, நெருஞ்சில், வெள்ளரி விதை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்துவைத்து ஒரு கைப்பிடியளவு 1லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, 500 மிலியாக சுண்ட வைத்து வடிகட்டி காலை மாலை உணவுக்கு முன் குடித்து வந்தால் சிறுநீர் நன்கு வெளியேறும்.

சிறுநீர் எரிச்சல் குறையும். கோபுரந்தாங்கி வேரை நிழலில் உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிடவும். கால், கை, மூட்டுகளில் ஏற்படும் வலியை விரட்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News