பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்-டாப் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு வழங்கும் வரை பள்ளிகளில் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். தாமதமாகும் பட்சத்தில், போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் பள்ளிகளில் லேப்-டாப் திருடு போகின்றன.
இவ்வாறு, ஆண்டு வாரியாக, இதுவரை களவு போன லேப்-டாப்களின் எண்ணிக்கை பள்ளிகளின் பெயர், எப்.ஐ.ஆர் விவரம், மீட்கப்பட்டவைகளின் எண்ணிக்கை, ஆகிய விவரங்கள் கல்வித்துறை சார்பில் கேட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, திருட்டு போன லேப்-டாப்ளுக்கான தொகையை அரசு கணக்கில் செலுத்திய விவரம், எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை விவரம் போன்ற விவரங்களும் பள்ளி வாரியாக திரட்டும் பணியில் கல்வி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment