Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 9, 2020

5 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் - செங்கோட்டையன்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வரும் 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

5 நாளிலும் ஆன்லைன் வகுப்பு நடக்கிறதா? என்பது குறித்து பிளாக்லெவல் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். மேலும் கொரோனா சூழ்நிலை இருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை, கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர்தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பகுதிநேர நூலங்களை முழுநேர நூலங்களாக மாற்றம் செய்யவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களைக் காண நேரிடும் எனக்கூறி ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் விதிகளை அறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் வகுப்பு வாரியாக மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் நேரமும் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று தீர்ப்பளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News