Join THAMIZHKADAL WhatsApp Groups
வரும், 13ம் தேதி நடக்க உள்ள, 'நீட்' தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில்சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, 13ம் தேதி, நாடு முழுதும் நடக்கிறது. இதில், 20 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
இந்த தேர்வுக்கான தேர்வு மையங்கள் நிர்ணயிக்கப் பட்டு, அதன் பட்டியல், தமிழக பள்ளி கல்வி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு மையங்களில், நீட் தேர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனுக்கு, பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், தமிழக அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர் களுக்கும், நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தெரிவித்து, உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர் களுக்கும், நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தெரிவித்து, உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment