Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 6, 2020

பி.இ பி.டெக் இளங்கலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் 6552 இடங்கள் காலியாக உள்ளன

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை 28ஆம் தேதி உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை 3 ந் தேதி மற்றும் 4ந் தேதி ஆகிய நாட்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.அதனைத்தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கலந்தாய்வில்

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட 150 இடங்களில் 134 மாணவர்களும்

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஒதுக்கீட்டில் உள்ள 6 ஆயிரத்து 500 இடங்களில் 107 மாணவர்களும் 

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 500 இடங்களில் 357 மாணவர்களும் 

இடங்களை தேர்வு செய்துள்ளனர் அந்த வகையில் சிறப்பு பிரிவினருக்கு மொத்தமுள்ள 7150 இடங்களில் 598 மாணவர்கள் மட்டுமே இடங்களை தேர்வு செய்துள்ளனர் 6552 இடங்கள் காலியாக உள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி அதாவது இன்று மாலை 5 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை மாணவர்கள்.தாங்கள் தேர்ந்தெடுத்த இடத்தினை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் காலியாக உள்ள இடங்கள் பொது கலந்தாய்விற்கு கொண்டுசெல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News