Join THAMIZHKADAL WhatsApp Groups
மாணவர்களுக்கான தேர்ச்சி குறித்த முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக சட்ட பல்கலை அறிவித்துள்ளது. தமிழகத்தில், கொரோனா தொற்று காரணமாக, அனைத்து கல்லுாரிகளின் செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
கடந்த, 2019 - 20ம் கல்வி ஆண்டில், இறுதி ஆண்டு படித்த மாணவர்களுக்கு மட்டும், இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது.சுரப்பா எதிர்ப்புமேலும், அரியர் எழுத வேண்டிய மாணவர்களுக்கும், தேர்வு ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்தப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்து, தேர்வையும் நடத்தியது. இது குறித்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சார்பில், அண்ணா பல்கலைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை சுரப்பாவும், தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், தமிழக அரசின் அரியர் தேர்ச்சி குறித்த முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக சட்ட பல்கலை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment