Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 11, 2020

பாகற்காய் அதிகம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகவே கசப்பு சுவை உள்ள காய்கறிகளை கர்ப்ப காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. பாகற்காய் அதிகம் சாப்பிடுவது கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

பாகற்காய் போன்ற காய்கறிகள் சாப்பிடுவது சில மருந்துகளால் உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை தடுக்கும். மாத்திரைகளுடன் சேர்த்து பாகற்காயை சாப்பிடும்போது அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் பாதிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு மிகவும் குறைய வாய்ப்புள்ளது, இதனால் அடிக்கடி மயக்கம் கூட ஏற்படலாம். ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து சாப்பிடுபவர்கள் பாகற்காய் சாப்பிடும் முன் மருத்துவர்களுடன் ஆலோசிப்பது நல்லது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்களுக்கு பாகற்காய் சாறு குடிக்க கொடுத்து சோதனை செய்யப்பட்டது. பாகற்காய் சாறு குடிக்கும் முன் சீராக இருந்த இதய துடிப்பு பாகற்காய் சாறு குடித்தபின் சீரற்றதாக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லீரலுக்கும், பாகற்காய்க்கும் எப்பொழுதும் ஒத்துவராது, அதற்கு ஆதாரங்களும் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்காக பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாகற்காய் சாப்பிடுவது நேரடியாக கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து பாகற்காய் சாப்பிடுவது உங்கள் தமனிகளை கடினமாக்கும் ஆர்தேரொக்ளோரோஸிஸ் நோயை உருவாக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News