Join THAMIZHKADAL WhatsApp Groups
“காலையில் ராஜாவாகவும், மதியம் மந்திரியாகவும், இரவில் ஒரு பிச்சைகாரனாகவும் சாப்பிட வேண்டும்.”
இந்த பழமொழியை நிச்சயம் நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள். எனவே இரவில் நீங்கள் சாப்பிடும் உணவு மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இதற்கு காரணம் என்னவென்றால் இரவு நேரத்தில் நாம் தூங்குவதால் நமது உடலானது நேராக இருக்கும். இதன் காரணமாக செரிமானம் நடைபெறாது. இத்தகைய முக்கியமான இரவு நேரத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பெரும்பாலான வீடுகளில் இரவு நேரத்தில் தான் விருந்து தடபுடலாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகள் இல்லாமல் இருக்காது. இது முற்றிலும் தவறான ஒரு உணவு முறை ஆகும். ஏனெனில் அசைவ உணவு செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இரவு நேரத்தில் இந்த செரிமானமானது நடைபெறாது. எனவே இரவு நேரங்களில் கண்டிப்பாக அசைவ உணவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
வாயு அதிகமாக உள்ள உணவுகளையும் இரவு நேரத்தில் எடுக்க வேண்டாம். உதாரணமாக உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உண்ண வேண்டாம். இதற்கு காரணம் வாயுவானது இதயத்திற்கு நேரடியாக சென்று இரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
பலருக்கு சாதம் சாப்பிட்டால் தான் வயிறு நிரம்பியது போல இருக்கும். ஆனால் இரவு வேவையில் சாதம் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் செரிமானம் ஆவதற்கு கூடுதல் நேரம் எடுத்து கொள்ளும் என்பதால் இதனை இரவு நேரத்தில் சாப்பிட வேண்டாம்.
அடுத்தபடியாக முட்டையில் வாயுச்சத்து அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் முட்டை சாப்பிடுவதை தவிருங்கள். அதிலும் முக்கியமாக வயதானவர்கள் இரவு வேலையில் முட்டையை அறவே ஒதுக்க வேண்டும். கடைசியில் மைதா மாவினால் ஆன எந்த ஒரு பண்டத்தையும் இரவு நேரத்தில் எடுக்க வேண்டாம். மைதா மாவின் இழுப்பு தன்மை காரணமாக அது குடலில் சென்று சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பரோட்டா போன்றவற்றை இரவு நேரத்தில் சாப்பிட கூடாது.
No comments:
Post a Comment